மழைகாலம் -கிராமம்-2
ஏயா
எங்கையா இருக்க ..
ஆத்தா நா இங்க இருக்கே ......
அங்க என்னய்யா பன்ற
ஆத்தா எனக்கு கண்ணு தெரியல...
பிஞ்சு மனசுகாரி
பட்டபாடு இருக்கே
என்னய்யா சொல்ற கண்ணு தெரியலையா
ஆமா ஆத்தா.........
மடியில தூக்கி போட்டு
மழை தண்ணீரோடு
ஏ ஆத்தா கண்ணீரும்
என் கண்ணீல் விழ
கண் விழித்து பார்த்தேன்
பரட்ட தலையோட அப்பனும் ஆத்தாளும்
அட
சிரிக்கி மகனே
கொஞ்ச நேரத்துல என்னையும்
உங்க ஆத்தாவையும் சாவ அடிச்சிட்டையடா ...........
இல்ல ஆத்தா ....
இடி இடிச்சா கண்ணு போயிருன்னு நீதான ஆத்தா சொன்ன
அதா
நானும் கண்ண துறக்காம இருந்தேன்
அட பாவி மகனே
எட்டு புள்ள பெத்தா
எட்டு ஊரு போனும்னு
ஒத்த புள்ள பெத்து கிளிபுள்ள மாறி வளத்தா
ஒத்த வார்த்தையில
ஒல அரிசி போட பாத்தியா டா.....
அப்ப இடி இடிச்சா கண்ணு தெரியுமா
எங்கிட்ட பொய் சொன்னியா ஆத்தா
இல்ல ராசா ..........
ஒழுக்கு தண்ணிக்கு வச்ச பாத்திரமு நேரஞ்ச்சிருச்சி
வீடும் மூழ்கிருச்சி
படுக்க இடமில்ல
பொத்திக்க போர்வ இல்ல
ஆட்டு மந்தையில
பரந்த கூர மூனு எடுத்து
அப்பனுக்கும் ஆத்தாவுக்கும்
நடுவுல நா துங்குன தூக்கம் இருக்கே
சொர்க்கம் கூட இதற்க்கு பின்னால் தான்........................
மழை காலம் என் கிராம வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று