உயில்

கொஞ்சம்
கொஞ்சமாய் சேர்த்துவைக்கப்பட்ட
உனக்கான
நினைவுகளை
வலுக்கட்டாயமாக துரத்தியடிக்க
நானொன்றும்
இதயமில்லாத நீயில்லை......
இருப்பினும்
ஒற்றைப்பார்வையில்
உயிர்நாண்ஏற்றுபவளே
இந்த உயிர்க்கூட
ஏற்கனவே
உனக்காக
உயில்
எழுதப்பட்டு விட்டது.....

எழுதியவர் : மணிமாறன் (21-Aug-15, 9:13 pm)
Tanglish : uyil
பார்வை : 136

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே