குறை நிறை நிறை குறை

"குறை நிறை " "நிறை குறை "
*******************************************

குறையின்றி ஏதுமில்லை நிறைவானது ஒன்றுமில்லை
குறையற்ற மனிதருள்ளும் நிறைவாகா ஒன்றுண்டு
நிறைவேறும் செயல்பாடும் குறைகாண ஏதுவாகும்
நிறைந்து நிற்பதுவே குறைகாணும் தத்துவங்கள்
குறைபேசும் நபர்களிடை குறையுண்டு சத்தியமே
குறைபேசா நிறைவாளர் குறையின்றி வாழ்வாரே
நிறைகண்டு நிற்போரும் குறைகண்டு நிமிர்ந்தோரே
குறைகாணா ஆக்கங்கள் நிறைவேற்ற யாருண்டு
நிறைவேறா திட்டங்கள் குறைவின்றி இருப்பதுவே
நிறைவேறும் குறைகளதும் குறையின்றி நிறைவேறும்
குறையேது நிறையேது குறையாத நிறையேது
குறை வேறு நிறை வேறு குறைகாணும் நிறை வேறு
நிறை வேரில் குறை ஏற குறைவாறே நிறைவாளர்

நிறை குறை குறை நிறை குறை குறை நிறை நிறை
குறை குறை நிறை நிறை நிறை நிறை இறை நிறை !!!
******************

இறுதியில் வரும் இரண்டு வரிகள் சிலேடையாக புனையப்பட்டிருக்கிறது . இந்த
வரிகளை மீண்டும் மீண்டும் படித்திட பல வகையில் பொருள்கொள்ள முடியும் .

நன்றி

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Aug-15, 10:49 pm)
பார்வை : 332

மேலே