கவிதைகள் ஒரு ஜீவநதி

நான் உன்னை காதலித்த பிறகு,
இன்னும் அழகாகி விட்டதாய்,
பெருமையுடன் கூறுகிறாய்.

"நீ" எனக் கேட்டதற்கு,
கவிஞன் ஆகிவிட்டதாய்,
நான் பெருமையுடன் கூறுகிறேன்.

அவ்வளவாய் ஆர்வமின்றி,
சாதாரணமாய் முகம்காட்டி,
பேச்சை மாற்றுகிறாய்.

உன் பேச்சை நிறுத்திவிட்டு,
ஆணித்தரமாய் கூறுகிறேன்:
"பின்னொரு காலம்
உனக்கு வரும்
நரை முடிக்கும்
தோலின் சுருக்கத்திற்க்கும்
கூட என்னிடம் - கவிதைகள்
வற்றாது வரும் என்று"

எழுதியவர் : செந்ஜென் (23-Aug-15, 12:09 am)
பார்வை : 102

மேலே