சரியெல்லாம் சரியுமல்ல தவறெல்லாம் தவறுமல்ல

சிந்தனைகள் சிதறுவதால்
சிற்பங்கள் சிதைகின்றன....

சரிகள் சறுக்குவதால்
பிழைகள் பிறக்கின்றன....

தவறுகள் சரிகளின்
எதிரியல்ல,
ஆசான்.
ஒவ்வொரு தவறும்
சரிகளை பார்த்தே
சரி செய்யபடுகிறது

சரிகள் பாடமாகின்றன
தவறுகள் அனுபவமாகின்றன

இன்று தவறெனபடுவது
நாளை சரியாவதும்
இன்று சரியெனபடுவது
நாளை தவறாவதும்
காலமாற்றத்தினால்
காலாவதியாகும் முடிவுகள்.

ஏனெனில் சரியெல்லாம் சரியுமல்ல
தவறெல்லாம் தவறும் அல்ல...


--PRIYA

எழுதியவர் : PRIYA (23-Aug-15, 12:46 am)
பார்வை : 168

மேலே