பிரிக்கப்பட்ட பிரியமே
அதிகாலைப் பொழுதுகளில்
ஆடு மேய்க்கும் சாக்கில்
புல் தாங்கிய பனித்துளிகளை
உடைத்துக் கொண்டே ஊர் கண்
மறைந்து கொண்டே காதல்
செய்து வந்தோம்..!
யார் கண் பட்டதோ இன்று
இருவருமே கோயில் திருவிழாவில்
பலூன் வாங்க நிற்கின்றோம்
நீ உன் குழந்தையுடன்
நான் என் குழந்தையுடன்..!
என்னசெய்வது...
சாதிகள் பார்த்து மல்லிகை தனியே
ரோஜாக்கள் தனியே என்று
பிரித்து வைக்காத பூ மாலையை
கழுத்தில் அணிந்து கொண்டு
சாதிகள் பார்க்கும் மண
மேடைகள்தான் இங்கு அதிகம்..
செ.மணி