பாட்டுக்கு பாட்டு -பாராட்டு பாட்டு
மதிப்பிற்குரிய சியாமளா அம்மா!
தங்களின் மும்மண்டிலவெண்பாவிற்கு இந்த வெண்பா
பா(ரா)ட்டு பாட்டு
செம்மையாய் செய்தவெண்பா செப்பலிசை தந்திடும்பா
அம்மாஉன் செந்தமிழ்பா ஒப்பிலா சித்திரப்பா
மும்முகம் கொண்டவெண்பா முப்பரி மானவெண்பா
செம்மொழி செப்பிடும் பார்-(1)
இதனை இப்படியும் பாடலாம்…
செப்பலிசை தந்திடும்பா செம்மையாய் செய்தவெண்பா
ஒப்பிலா சித்திரப்பா அம்மாஉன் செந்தமிழ்பா
முப்பரி மானவெண்பா மும்முகம் கொண்டவெண்பா
செப்பிடும் பார்செம் மொழி -(2)
3ஆம் மற்றும் 4ஆம் சீர்களை முன்கொண்டு வரவும்
ஈற்றடியில் 2&3 ஆம் சீர்களை முன்கொண்டு வரவும்
இப்படி இருவிகற்பம் வரவும் பாடலாம்
செப்பலிசை தந்திடும்பா ஒப்பிலா சித்திரப்பா
முப்பரி மானவெண்பா செம்மையாய் செய்தவெண்பா
அம்மாஉன் செந்தமிழ்பா மும்முகம் கொண்டவெண்பா
செம்மொழி செப்பிடும் பார் -(3)
முன்சொன்ன வெண்பாவில் எந்த ஒரு அடியினையும் எங்கு இடம்மாற்றினாலும்
பொருளும் இலக்கணமும் மாறாது, ஈற்றடிக்கு மட்டும் எந்த ஒரு இரண்டு சீர்களையும்
வெண்பாவிலக்கணத்திற்கு தக்கவாறு மூன்று சீர்களாக பிரித்து படிக்கலாம்
இது இலக்கணத்தில் இருக்கிறதா? என்றால் இது இலக்கணத்திற்குள் இருக்கிறது
செப்பிடும்பார் செம்மொழி ஒப்பிலா சித்திரப்பா
முப்பரி மானவெண்பா செப்பலிசை தந்திடும்பா
அம்மாஉன் செந்தமிழ்பா செம்மையாய் செய்தவெண்பா
மும்முகம் கொண்டவெண் பா
முப்பரிமான வெண்பா – ஒரே வெண்பாவில்3 D படம் மூன்று வடிவம் காட்டுவது….
ஒரே வெண்பாவில் மூன்று வடிவம் காட்டுவது சித்திரப்பா தானே…
வெண்பாவில் செப்பலோசை தானே எழும்