மௌன வலி
சேகர் கிளம்பும் போது
ஆன தாமதம் அவனது
ஒவ்வொரு செயலிலும்
பிரதிபலித்தது . CAR DRIVING
தாறு மாறாயிற்று.
வழியில் சந்தித்த வாகனங்களை
ஓட்டியவர்களை திட்டியபடி
கோயம்பேடு நெருங்கி CAR ஐ
PARK செய்து திரும்பும் போது
அந்த வோல்வா பஸ் கிளம்ப
தயாராக இருந்தது
கண்டக்டர் அவனை முறைத்தபடி
பஸ் கிளம்ப அவன் தாமதம் தான்
காரணம் என்று கூறவும் இருவரின்
சிறிய வாக்குவாதத்திற்கு பிறகு
ஒரு வழியாக SEAT ஐ அடைந்தான் .
WINDOW SEAT ல் 80 வயது தாடி பெரியவர்
ஏதோ ஜபித்த படி அமர்ந்திருந்தார்.
அவரிடம் AISEL SEAT ல் மாற்றி அமர
சொன்னான் . அவரும் சம்மதித்து அமர்ந்தார்
அடக்கி வைத்த கோபத்தோடு
பெரிய SUITCASE ஐ மேலே
வைத்தது தான் தாமதம் .
`டமால் ` என்று பெரிய சத்தத்துடன்
பெரியவர் தலை மேல் அது விழ
பெரியவர் தலையிலிருந்து ரத்தம்
கசிய ஆரம்பித்தது .பஸ்சில் உள்ள
அனைவரும் அவனை திட்ட
ஆரம்பிக்க பெரியவர் மட்டும்
மௌனத்தோடு அவனை பார்த்து
புன்னகையுடன் சேகரை இருக்கையில்
அமர செய்கை காண்பித்தார் .
அவரது மௌனம் அவனது
இதயத்தில் இன்றும்
வலித்து கொண்டே இருக்கிறது !!!!