சொல்ல மறந்த காதல் அல்ல

அறியா வயதில் அருகில் அமர்ந்தாள்
காதல் என்று சொல்லி இருந்தால்
உலகம் என்னை இகழ்ந்திருக்கும்
சொல்லாமல் மறைத்து கொண்டேன்

பத்தாம் வகுப்பில் அவள் புத்தகம் தந்தாள்
போட்டியில் வென்றதற்கு வாழ்த்து சொன்னாள்
என்னிடம் அவள் கொண்டது காதலாய் இருக்கலாம்
எப்படி தெரிந்திருக்கும்? சொன்னால் தானே
சொல்வதற்குள் பரிச்சை வந்து போனதே

பருவ வயதில் அவளை மீண்டும் கண்டேன்
அழகில் மயங்கி மறுமுறை காதல் கொண்டேன்
அவளிடம் அதை நான் சொல்லி இருந்தால்
காதல் விடுத்து நட்பை காண் என்பாள்
தயக்கம் கொண்டு விலகி நின்றேன்

காதலர் தினம் நாட்காட்டியில் முடிந்தது
ரக்ஷாபந்தன் விரோதி ஆனது
காதல் என்பது கணவாய் போவதா
வாய் திறந்து நான் சொன்னால்
என் கைகளில் சேர்வதா ????

கடந்த காலம் பற்றி கவலை இல்லை
இனி வரும் நாளை இழந்திட போவதில்லை
துணிவு கொண்டு அவளை தேடி சென்றேன்
கையில் மலருடன் அவள் முன் நின்றேன்

கண் பார்த்து காதல் சொல்வது கடினம் தான்
அவள் விழிகள் பார்க்க தயங்கி
என் தலை தாழ்த்தி கொண்டேன்
காதலை சொல்லாமல் நான் விலகி வந்தேன்

இம்முறை என்னை தடுத்தது என் மனம் அல்ல
அவள் கழுத்தில் தொங்கிய தாலி...!!!
என் காதல் சொல்ல மறந்த காதல் அல்ல
சொல்ல முடியாமல் போன காதல் ... !!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (24-Aug-15, 6:42 pm)
பார்வை : 142

மேலே