தாய்மையின் தவம்

ஒரு தாயின் தவம்
...............................................
2015.08.06
அன்று,
சுகமான சுகப்பிரசவம் - நேரம்
அதிகாலை 5.20 மணி
என் கண்மணியைக் காண
உயிரோடு போராட ஆரம்பித்த
கனப்பொழுதுகள்.........................
வலித்த தருனமெல்லாம்
என் கணவனும்.....
என் தாயும்- ஆறுதலாக
கண்முன்னே .................. வந்த காட்சிகள்
மறக்காது மரணம் வரை.
துடித்தேன்
அழுதேன் -
மரணப்போராட்டத்தில் நான் இருந்தாலும்
மகளின் முகம் காண்பதற்காய் மறந்து விட்டேன்
தொடர்ந்து போராட்டம்..........................
மனதில் நினைவலைகள்
நேரம் 10.48 மு.ப மணி
ம்ம்மா என்ற ஓசை
நான் அழைக்கவில்லை - என்
மகள் என்னை
அழைத்த முதல் ஓசை அது
ஆஹா அந்த நிமிடம்
வந்த சந்தோசம்
அளவு கடந்த பூரிப்பு
வலிகளையும் - கொண்ட
வெட்கத்தையும்
மறைத்துவிட்டது.
என் மகளின் முகம் பார்த்து
படைத்தவனின் திருநாமத்தோடு
நுகர்ந்து
முத்தமிட்ட - முதல் தருணம்
உலகையே மறந்து
தாய்மையை உணர்ந்த தருனமது.
மிகைத்த ஆனந்தத்தை
பகிரந்து கொள்ள - அருகில்
இல்லையே என்னவர்.
எப்படிச்சொல்லவேன் ............
ஓர் தாதியின் தொலைபேசியில்
அழைப்பொன்றை கேட்டபொழுது...
மண்ணிக்கனும்
சட்ட ஒழுங்கிக்கு முரண் என்ற
பதில்....
ஒவ்வொரு பெண்னும்
பிரவசத்தில் பெறும்
வலிகள் - குழந்தையின்
விழிகளின்
விழிம்பில் மறைந்து விடும்....
என்பதை - நானும்
ஓர் தாயாக
உணர்ந்த நாள்..
06.08.2015 வியாழன் அன்று.