பறவைகளின் பாடம்
பறவைகள் பார்த்திட மட்டுமல்ல
பாடம் பலவும் கற்றிடத்தான்,
உறவு பகையெனப் பிரித்திடுவான்
வேற்றுமைச் சிறகை விரித்திடுவான்,
நிறமென இனமென விலகிடுவான்
நினைத்திடா பேதமாய் உலவிடுவான்,
மறந்திடும் மனிதனைத் திருத்திடத்தான்
மேலவை ஒன்றாய்ப் பறப்பதுவே...!