யார் அவன்

கசந்து போன எனது கனவுகளுக்கு
இனிமை கொடுத்தவன்!

உறைந்துபோன எனது உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவன்!

சிதைந்துபோன எனது செல்களுக்கு புத்துயிர் கொடுத்தவன்!

பட்டுப்போன எனது வாழ்க்கைக்கு வசந்தத்தை கொடுத்தவன்!

சிதறிப்போன எனது சிந்தனைகளை சீரமைத்தவன்!

இறுகிப்போன எனது இருதயத்தை இதமாக்கியவன்!

நித்தம் நித்தம் எனது நினைவில் தோன்றி என் துயில்களைய செய்தவன்..
யார் அவன்!!!
அவன் என்னவன்!!!...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (24-Aug-15, 5:11 pm)
Tanglish : yaar avan
பார்வை : 164

மேலே