அவள்
விழிகள் புணர்ந்து கண்டது காதலின் ஆதியை
காதல் அது கண்டது காமத்தின் பாதையை
காமம் அது இல்லாமல் காதல் அது என்னாகும்
காதலொன்று இல்லாமல் காமம் கொண்டு என்னாகும்
வாவென்று அழைத்ததோ உன் விழி
கவிதைகள் பொய் கொள்ளலாம் அது விதி
முத்தமிட அழைத்தது உன் இதழ்
அது பேர் சொன்னாலே போதும் என் புகழ்
கண்கள் அன்று கண்டதம்மா
இரு மனம் இணைந்ததம்மா
மும்முடி கயிற்றில் தான்
திருமணம் நிகழ்ந்ததம்மா
நிகழத்தான் கொண்டதென்ன ஓராயிரம் கனவுகள்
அச்சமது நகர்த்தின ஓசையில்ல இரவுகள்
வாகை பெற காணவேண்டும் முதிர்ச்சி
கொண்டவுடன் காணத்துடித்தது புணர்ச்சி
இடை கண்டதும் பிறந்தது ஒரு கேள்வி
பதில் கொள்ள முடியாதொரு வேள்வி
விடை காண அசைந்தது இந்த இடை
பெற்றதோ கண்ணீரில் ஓர் விடை
சிந்திய துளி முத்தொன்றை உயிர்பிக்க
சிப்பி திறக்க சில திங்கள் நான் காக்க
சிறு வாயும் பிழந்ததம்மா
முத்தொண்றும் பிறந்ததம்மா
பல ஞாயிறு காத்தவனும் வாய் விட்டு கூக்கூவ
பொறுத்திருந்த தந்தையின் கண்ணீரும் மடை திறக்கும்
பஞ்சு உடல் தொட்டவுடன்
உந்தன் மேனி நினைவூட்ட
முத்தமிடத் துடித்த இதழ்
ஈரமின்றி காயுதம்மா
கண்ட வலி நான் உணர
எனதின்மை எனக்குணர்த்த
நினைவில் வந்து பாலூட்ட
தாய் அவளை நினைவூட்ட
பெற்ற போது கொண்டாயே
அவ்வின்பம் நானறியேன்..!!!
- பாரதி