காதல் விசித்திரமும் விநோதமும் 555

காதல்...
கல்லறையில் மலர்ந்த
மலர்கள் என்று...
தேனீக்கள் தேன்
எடுக்காமல் இல்லை...
சேகரித்த தேனை மனிதர்கள்
ருசிக்காமலும் இல்லை...
அதுபோல் தான் காதல்...
விசித்திரமானது என்பார்கள்
காதலிக்க தைரியமில்லாதவர்கள்...
பிரிவு உயிரை கொள்ளும்
கொடுமையானது என்பார்கள்...
காதலில் பிரிந்தவர்கள்...
தூரத்தில் இருந்து பார்த்தால்
விசித்திரமானது...
அருகில் சென்று பார்த்தால்
அழகானது காதல்...
அவன் அவள் மீதும்
அவள் அவன் மீதும்...
எப்போது காதல் வரும்
தெரிவதில்லை...
பிரிவு இருவருக்கும் எப்போது
நம்பிக்கை இல்லாமல் போகிறதோ...
அப்போது அங்கு பிரிவு
ஆட்கொள்ளும்...
அவன் அவள் எப்போது காதல்
உயிர் பெற்றது உணர்ந்தால்...
அங்கு பிரிவு இருக்காது...
தித்திக்கும் தேனைப்போல்
இன்பம் மட்டுமே...
காதல் தித்திக்குதே.....