நல் நட்பாக மாறிவிடாது

நல் நட்பாக மாறிவிடாது ....!!!

---

மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!

மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!

+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Aug-15, 7:09 pm)
பார்வை : 86

மேலே