தலைவிதி

எங்கேயோ என் எண்ணங்கள்..
எதை நோக்கியோ என் பயணங்கள்..
வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே,
எத்தனையோ வாள் வீச்சுக்கள்..

வாலிபத்தின் முதற் படியிலே,
வயோதிபத்தின் அனுபவங்கள்...
வாழும் இந்த மண் மீதிலே
வஞ்சனையின் வாசங்கள்..

வெளுத்ததெல்லாம் பாலென நம்பும்
மின்னுவதெல்லாம் பொன்னென சொல்லும்
அப்பாவிகளின் அரண்மனை அதிலே
இத்தனை காலம் இறுமாந்திருந்தேன்..

சுற்றி நிற்போர் நட்புக் கரம் நீட்ட,
கூட இருப்போர் நகைசுவை பேச,
அத்தனையும் விழலுக்கிறைத்த நீராய்,
ஊமை காயங்கள் நெஞ்சிலே மீதியாய்...

பந்தி முந்தும் சிலரை போலே,
முந்தி நிற்பது துன்பம் தானோ...
வந்து தொடரும் அல்லல் எல்லாம்,
நின்று கொல்லும் தலைவிதி பெற்றேன்..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (25-Aug-15, 7:12 pm)
Tanglish : en thalaivithi
பார்வை : 4857

மேலே