எங்கே செல்லும் இந்த பாதை

பிறவியெனும் பெருங்கடலில்
இயந்திர கதியில் இதோ
எனது வாழ்க்கைப்பயணம்

பணமெனும் எரிபொருள்
நம்பியே பாதி வழியில்

அறிவும் திறமையும் மூலதனமான
எனது ஆளுமைக்கப்பல்

அதிர்ஷ்ட காற்று வீசினால்
அமைதியாக கரை சேரலாம்

சூறாவளி பிரச்சனைகளை
சுற்றத்துடன் எதிர்கொள்ள

எரிபொருள் மட்டுமே
எனக்கு பிரச்சினை

இல்லையெனில்
பாசாங்கு பயணம்
நடுக்கடலில்
நங்கூரமும் இல்லாமல்
கரை சேரவும் விரும்பாமலே!

எழுதியவர் : செல்வமணி (26-Aug-15, 11:08 am)
பார்வை : 307

மேலே