இருண்ட பகுதிக்கு ஒரு இன்பச் சுற்றுலா

மனதின் ..
மூலை முடுக்குகளில்
இருக்கும் ..
இருண்ட பகுதிகளுக்கு
அவ்வப்போது
ஒரு இன்பச் சுற்றுலா ..
சென்று
நோட்டமிட்டு விட்டு வா..!

அதன் எல்லைகள்
சுருங்கிக் கொண்டே வருகிறதா
அல்லது
விரிந்து விட்டிருக்கிறதா ..
என்பதைப் பார்ப்பதற்காக..மட்டும்!

அதில் தங்குமிடம் என்று
ஏதாவது இருந்தால்
ஒவ்வொரு முறையும்
அதை இடித்து விட்டு வா..
அங்கேயே தங்கிவிடாமல்!
..
ஏனெனில் அவை
கல் அறைகளாக மட்டுமல்ல..
கல்லறைகளாக கூட
அங்கே இருப்பது
அவசியம் இல்லாதது..!

எழுதியவர் : கருணா (26-Aug-15, 3:11 pm)
பார்வை : 136

மேலே