சம்பிரதாயங்கள் சரியா
வணக்கம் !
சம்பிரதாயங்கள் சரியா ?
சற்றுமுன் நான் வாசித்து முடித்த புத்தகம்.
தோழர் மஞ்சை.வசந்தன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய சில புத்தகங்களை ஏற்கனவே நான் படித்துள்ளேன். அப்போதே இவரின் எழுத்து முறையும், சுருங்க கூறி எளிமையாக விளங்கச் செய்யும் முறையும் எனக்கு பிடித்திருந்தது.
சம்பிரதாயங்கள் சரியா ? என்ற புத்தகத்தையும் ஆவலோடு படித்து முடித்தேன். மிகவும் சிறப்பாக ஒவ்வொரு சம்பிரதாயங்களாக எடுத்துக்காட்டி, அவை எப்படி என்ன கால சூழ்நிலையில் தோன்றியிருக்கும், அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன, நோக்கம் என்ன, நிகழ் காலத்தில் எப்படி அதன் அர்த்தம் அறிவுக்கு ஒவ்வாத வகையில் திறந்துள்ளது போன்ற பல விடயங்களை தெள்ளத்தெளிவாக சுருக்கமாக கூறியுள்ளார்.
இன்று வரை நாம் கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களில் சில இன்று தேவையில்லை எனவும் சுட்டிகாட்டி உள்ளார். உதாரணமாக
#இரவு_வேளையில்_வீட்டை_பெருக்கி_கூட்டி_குப்பையை வெளில் குப்பை தொட்டியில் கொட்டுவது, #பாலி_விடுதல் போன்றவற்றை சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் இது மதத்திற்கோ சடங்குகளுக்கோ எதிரான நூல் அல்லவே அல்ல, அறியாமையை, சடங்குகளில் உள்ள சாய திரிபுகளை வெளுக்கும் நூல் ஆகும். நண்பர்கள் கண்டிப்பாக இந்நூலை படிக்க வேண்டுகிறேன். காரணம் அறியாமல் செய்யும் ஓர் செயல் அடி முட்டாள் தனமானது. ஆபத்தானதும் கூட,
எனவே சபிரதாயங்கள் குறித்த உண்மையும் அவற்றின் விளக்கமும் அறிய தோழர் தஞ்சை வசந்தன் அவர்கள் எழுதியுள்ள #சம்பிரதாயங்கள்_சரியா? என்ற நூலை கட்டாயம் வாங்கி படியுங்கள். பிறரையும் படிக்க செய்யுங்கள்.
நன்றி...
செந்தில் குமார் செயக்கொடி