கலைந்தாயடி

வான வில்லும் தெரியுதடி
வளைக்க சென்றால்
மறையுதடி .....

கானல் நீரும் தெரியுதடி
காண சென்றால்
மறையுதடி ....

பனி மலையும் தெரியுதடி
பக்கம் சென்றால்
உருகுதடி ....

பனி துளியும் தெரியுதடி
பார்க்க சென்றால்
உடைந்ததடி ....

கனவில் நீயும் வந்தாயடி
நினைவில் நீயும் கலந்தாயடி
நிழலாய் நானும் வந்தேனடி
விழித்து பார்த்தேன்
கலைந்தாயடி ...

எழுதியவர் : கவியாருமுகம் (26-Aug-15, 4:14 pm)
பார்வை : 96

மேலே