புரட்டுகிறேன் ஒரு புத்தகத்தை

புரட்டும் புத்தகம் நீ
புன்னகை பூவும் நீ
பூவுள் தேனும நீ
தேனின் சுவையும் நீ
தென்றல் கவிதை நீ
கவிதைப் பொருளும் நீ
கவிதை அருளும் நீ !

----புதுப் பா

புரட்டிடும் புத்தகம்நீ புன்னகை பூவும்நீ
பூவினில் தேனுமநீ தேனின் சுவையும்நீ
தென்றல் கவிதைநீ திங்களழ கும்நீ
கவிதைப் பொருளருளும் நீ

-----இன்னிசை வெண்பா

புரட்டும் புத்தகம்நீ புன்னகைப் பூவும்நீ
பூவுள் தேனுமநீ தேனின் சுவையும்நீ
தென்றல் கவிதைநீ திங்கள் ஆழகும்நீ
கவிதைப் பொருளும்நீ கவிதை அருளும்நீயே !

----நிலை மண்டில ஆசிரியப்பா
-----கவின் சாரலன்
ஒரு புத்தகத்தை மூவகை பாக்களாக புரட்டிப் பார்க்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-15, 4:37 pm)
பார்வை : 956

மேலே