ஆசைகள் சாமீ
மனதின் நீட்சிகள்
மனிதனின் ஆசைகள் ..
புயலிடைத் தோணிகள்
சிக்குதல் போலவே
சிதைவுறும் அனுதினம்
ஈதொழிவது இன்மையால்
இனியது இல்லையே !
..
என்று சொல்லி கடந்த
அந்த மனிதரிடம் கேட்டேன்..
..
ஐயா..நீங்கள்..
ஊழலுக்கு எதிரானவரா ..
இலவசம் எதிர்ப்பவரா..
இல்லறம் துறந்தவரா ..
இம்மையை வெறுப்பவரா..
இன்மையை பூசிப்பவரா..
..
ஏம்பா..
..
சும்மா போக மாட்டே ..
..
இப்படித்தான் ..
ஒருத்தன் கேட்டதுக்கெல்லாம்
பதில் சொல்ல..அதையே
கவிதையாக எழுதி போட்டு விட்டான்..
போன மாதம்..
..
ஆளை விடு
சாமீ..!