காக்கா முட்டை நலம் கெட புழுதியில்

நல்ல முட்டையா, கெட்ட முட்டையா -
தெரியலயே இந்த காக்கா முட்டை?

படிக்க பள்ளிக்கூடம் போக வேண்டிய
எல்லாருமே போறாங்களா, படிச்சாங்களான்னு
பாக்க ஒரு டிபார்ட்மென்ட் இருந்தும்

படிப்பு கூட விலை ஏறிடுச்சு
பாதி விலைக்கு முடியாதுன்னு
மீதிய கட்டாதவங்கள துரத்துறாங்கலாம்

பள்ளிக்கூடம் இப்பெல்லாம் இருக்கிறவனுக்குன்னு
ஆயிடுச்சுன்னா மீதம் பேர் என்ன செய்வான் ?
செய்ய கூடாததெல்லாம் சேர்ந்தே செய்வான்
கொஞ்சம் சேர்த்தே செய்வான்

இந்த நிலமையில 'வெங்காயம்'னு திட்டுறதுக்கும்
திருத்திறதுக்கும் யாரு இருக்கா?

அவங்க அவங்க ஆளுக்கொரு வேலையில
கடல்ல பெருங்காயத்த கரைச்ச மாதிரி
காலம் தள்ளினா காக்கா முட்டைக்கு மவுசு தான்
கஷ்டத்த கூட காமெடியாக்கி வாழ்ந்தாச்சு

காலம் போற போக்க பார்த்துட்டே
போக வேண்டியது தானே, என்ன நான் சொல்றது ?

எழுதியவர் : செல்வமணி (26-Aug-15, 11:06 pm)
பார்வை : 81

மேலே