திருமணம் முடிந்து போனதனால்
என் இனிய தோழியே ....
திருமணம் முடிந்து போனதனால் ...
நட்பு முடிந்து போதல் நலமா ..?
போர் முடிந்து போன பின்னே - உலகம்
எல்லை கோடு கொண்டு
தங்கள் நாடு காப்பதில்லையா ?
என் இனிய தோழியே ... வா
அப்படி நாமும் காப்போம் நம் நட்புதனை ....