பூக்களின் போர்
"::: அந்தி சாயும் ஒரு மதுரமான மாலை பொழுதில் ஒரு காதலன் தனது இன்னுயிர் காதலியிடம் உரைத்தது:::"
********"""""***********""""*******""""*********
பூக்கள் எல்லாம் உன் மீது போர் தொடுக்கும் அபாயம் அடி கண்ணே சிறிது காலம் தலை மறைவாய் இரு...
உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா???
எனக்கில்லை .. படபடத்து திரியும் அந்த வண்ணத்து பூச்சிகளுக்கு...
ஏன்??
ஹும்.. அவை எல்லாம் தேனெடுக்க மலரின் இதழுக்கு வருவதில்லையாம்.. உன் இதழுக்கு இடம்பெயர்ந்து விட்டனவாம்.. ஆதலால் பூக்கள் உன் மீது பொறாமையில் இருக்கின்றன..
*****
வெட்கத்தில் அவள் கண்ணம் சிவக்க தலை குனிந்தாள்.
சத்தம் இல்லாமல் ஒரு " முத்தம் " பிறந்தது அங்கே...