புன்னை மரமும் பூக்குங் கனாவும்
புன்னை மரத்தடிப் பூந்தளிர்ப் பாயதன்
நன்னிழற் றண்மையிற் றங்கினேன் - மென்றுயில்
மின்னலைப் போலவென் மெல்லுட லார்க்கவு
மின்கனா கண்களில் பூம்.
#
புன்னை மரத்திலிருந்து உதிர்ந்திருக்கும் தளிர்ப்பூக்கள் பார்க்கப் பாய்போல் விளங்க,
அம்மரத்தின் நல்ல குளுமையான நிழலில் சற்றுத் தங்கி இளைப்பாறினேன். அக்கணம்,
(நிழலின் அருமையாலும், அயர்வினாலும்) என்னுடலை, மென்மையான உறக்கம்
மின்னலாய்ச் சட்டென வந்து போர்த்திக்கொண்டது.
அப்போது, எனது கண்களில் ஒளிமிகு, ஏற்றமிகு கனவொன்று, என் கண்களில் பூக்கும்.
#
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்.