அன்னை தெரஸா

ranslate message to English

அன்னை தெரஸா
===========================================ருத்ரா


உன்னால்
உலகம் ஒரு நாள்
ஒரு குப்பைத்தொட்டியில்
கண்விழித்தது.

________________________________________


மனிதன் மனிதன் என்றார்கள்
அர்த்தம் தெரியாமல்
நீ ஒரு நாள்
அந்த அழுகிய நோயாளியை
அரவணைக்கும் வரை.

__________________________________________


தேடுபவர்கள்
பரமண்டலத்தில் தேடட்டும்.
இந்த பரட்டைத்தலைக்
குழிவயிறுகளில் தான்
பரமண்டலங்களின் கூடு.

_____________________________________________



‍‍"எல்லாம் முடிந்தது"
தேவ வசனம் முடிந்திருக்கலாம்.
ஆனால் உன்னால் முடிந்தது
உணர்ந்து உருக‌
ஒரு கவளம் இருந்தால் போதுமே
மனித வசனம் உயிர்த்துக்கொள்ள!..என்று.

________________________________________________


கல்லறைச்சிப்பி உன்னை
தேவ முத்தாய் எடுத்துக்கொண்டது.
இந்த கிளிஞ்சல்களின்
புனித பட்டயம்
சிலுவை வலிக்கு
களிம்பு பூசிக்கொண்டது.

__________________________________________________


வெள்ளை அங்கியுடன்
நீலக்கோடுகளின் கீழ்
அந்த "வெள்ளச்சிரிப்பில்"
மானுடத்தின் அந்த புதிய‌ ஒளி
புதிய ஏற்பாடுகளையெல்லாம்
பழைய ஏற்பாடுகளாக்கி விட்டது.

____________________________________________________

எழுதியவர் : ருத்ரா (27-Aug-15, 5:17 am)
பார்வை : 70

மேலே