என்ன மாயமோ மந்திரமோ - வெண்பாக்கள்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பாவையின் பார்வையைப் பார்த்து மயங்கினேன்;
பாவையும் பார்வையும் எத்தனை எத்தனையோ;
பாவையின் கண்களில் என்னதான்பி ரேமையோ!
பாவையோ நீபூம்பா வை! 1

அவள்கண் களிலென்ன புன்சிரிப்பு; அஃதே
அவள்வதனம் கொண்டதோர் ஓரப்பார் வையோ,
அவள்ஒரு மோனோ லிசாவோ! முறுவ(ல்)
அவள்பார்வை மந்திர மோ! 2

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அவள்விழிகள் என்னபச்சை வண்ண நிறமோ,
அவள்ஒரு ஐஸ்வர்யா ராயோ! – அவளே!
அவள்விழிகள் என்னவூதா வர்ண நிறமோ,
அவள்எலிச பெத்டெய் லரோ! 1

அவள்என்ன மான்விழி கொண்டதோர் மையல்
தவழும்பொன் சோபியா லோரன் – பவள
அவள்விழிகள் பச்சை நிறமோ; - அவளும்
புவியிலொரு ஏஞ்செலினா வோ! 2

பல விகற்ப இன்னிசை வெண்பா

அவள்கண்கள் என்னபிர மிப்பூட்டும் பூனை
தவ,கண் களைநிகர்த்த, ’என்னழகு சீமாட்டி’
யில்வரும் நாயகி ஆட்ரிஹெப் பர்ன்தானோ!
நல்லழகு நாயகி யே! 1

’என்னழகு சீமாட்டி’ – My Fair Lady

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-15, 10:07 pm)
பார்வை : 53

மேலே