என்ன மாயமோ மந்திரமோ

2011 ல் புதுக் கவிதை

குரலிசைக் கலைஞர் கிருஷ்ணா
பாடினார் ராகம் தானம் பல்லவி!
பாடினார்! இனிமையாகப்
பாடினார்!

பல்லவி:
பாவையின் பார்வையைப் பார்த்ததும்
மனம் மயங்கினேன்...
பாவையின் பார்வையைப் பார்த்ததும்
மனம் மயங்கினேன்...

பாவையோ எத்தனை பாவை!
பார்வையும் எத்தனை பார்வை!
பாவையின் கண்களில் என்னதான்
பிரேமையோ! பலமுறை பாடினார்!

அவள் விழிகள் என்ன பச்சை நிறமோ,
அவள் ஒரு ஐஸ்வர்யா ராயோ!
அவள் விழிகள் என்ன ஊதா நிறமோ,
அவள் ஒரு எலிசபெத் டெய்லரோ!

அவள் என்ன மான் விழி அழகியோ,
அவள் ஒரு சோபியா லோரனோ!
அவள் விழிகள் என்ன பச்சை நிறமோ,
அவள் ஒரு ஏஞ்செலினா ஜோலியோ!

அவள் கண்கள் என்ன பிரமிப்பூட்டும்
பூனைக் கண்களை நிகர்த்ததோ,
அவள் ஒரு ஆட்ரி ஹெப் பர்னோ!

அவள் கண்கள் என்ன புன்சிரிப்பு
தவழும் ஓரப்பார்வையோ,
அவள் ஒரு மோனோ லிசாவோ!

பாவையின் பார்வையில் மனம் மயங்கச்
செய்தது என்ன மாயமோ! மந்திரமோ!

2015 ல் மரபுக் கவிதை

என்ன மாயமோ! மந்திரமோ! - வெண்பாக்கள்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பாவையின் பார்வையைப் பார்த்து மயங்கினேன்;
பாவையும் பார்வையும் எத்தனை எத்தனையோ;
பாவையின் கண்களில் என்னதான்பி ரேமையோ!
பாவையோ நீமாதங் கம்! 1

அவள்கண் களிலென்ன புன்சிரிப்பு; அஃதே
அவள்வதனம் கொண்டதோர் ஓரப்பார் வையோ,
அவள்ஒரு மோனோ லிசாவோ! முறுவ(ல்)
அவள்பார்வை மந்திர மோ! 2

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அவள்விழிகள் என்னபச்சை வண்ண நிறமோ,
அவள்ஒரு ஐஸ்வர்யா ராயோ! – அவளே!
அவள்விழிகள் என்னவூதா வர்ண நிறமோ,
அவள்எலிச பெத்டெய் லரோ! 1

அவள்என்ன மான்விழி கொண்டதோர் மையல்
தவழும்பொன் சோபியா லோரன் – பவள
அவள்விழிகள் பச்சை நிறமோ; - அவளும்
புவியிலொரு ஏஞ்செலினா வோ! 2

பல விகற்ப இன்னிசை வெண்பா

அவள்கண்கள் என்னபிர மிப்பூட்டும் பூனை
தவ,கண் களைநிகர்த்த, ’என்னழகு சீமாட்டி’
யில்வரும் நாயகி ஆட்ரிஹெப் பர்ன்தானோ!
நல்லழகு நாயகி யே! 1

’என்னழகு சீமாட்டி’ – My Fair Lady

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-15, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

மேலே