அக்னிச் சிறகுகள் தந்த அப்துல்கலாம்

முன்னாள், மூத்த குடிமகனே!
உன்னால் இந்த பாரதம்
இந்நாள் வரை,
பொலிவு பெற்றுக் கொண்டு தான் இருந்தது!

ஏழையாய் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்த போதும்
ஏணிப் படிகளைப் போல்
ஏற்றம் கண்டவன் நீ!

கனவு காணுங்கள் என
கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளுக்கும்,
கட்டிளம் காளையருக்கும் - பாடம்
கற்றுத் தந்தவன் நீ!

தன்னை எரித்து ஒளி தரும்
மெழுகு போல் - தன்
இன்ப துன்பங்களை துறந்து, நாட்டுக்கு
நற்பணி செய்த நல்லவன் நீ!

அக்னி ஏவுகணையை விண்ணை நோக்கி
வெற்றிகரமாய் செலுத்தியவன் நீ!
அண்டை நாட்டவரையும் அசர வைத்தவன் நீ!

தமிழ் வழியில் கற்றிருந்தாலும்,
தன்னம்பிக்கை எனும் சுடரை ஏற்றி
தகிக்கும் நட்சத்திரமாய் ஜொலிப்பவன் நீ!

வரும் காலத்தை,
வளமையான காலமாக மாற்ற
வளரும் பிள்ளைகளால் முடியும் - என
வழி வகுத்தவன் நீ!

உத்தமனே,
உன்னை பெற்றதால்
உன் தாய் மட்டுமல்ல,
உன் தாய்த் திருநாடே
பெருமை கொள்கிறது!!!

எழுதியவர் : தமிழரசன் (27-Aug-15, 2:34 pm)
சேர்த்தது : தமிழரசன்
பார்வை : 114

மேலே