ஐம்பாக்கள்
ஐம்பாக்கள்
==================================ருத்ரா
செமஸ்டர்
__________________________________________________________
சுவைத்து தின்று செரித்து
களித்து கழைக்கூத்துகள் ஆட
காதல் இருக்கிறது.
இடையில் "கொறிப்பதற்கு"மட்டுமே
பாடங்கள்.
_________________________________________________________
படிக்கும் போது
புத்தகப்பக்கங்களுக்கு
"இடைச்செருகலாக"
அவள் இமைத்துடிப்புகள் தான்.
அவள் கண்களை முழுதும்
படித்துவிட்டேன்.
புத்தகம் மட்டும்
அப்படியே இருக்கிறது.
_________________________________________________
அப்பாவிடம் எல்லாம் சொல்லுவேன்.
குவாண்டம் ஃபீல்டு தியரி எல்லாம்.
டி.பிரேன் காஸ்மாலஜியும் தான்.
எல்லாம் சென்டம் தான்.
ஒன்றில் மட்டும் தோண்ணூத்தொன்பது.
எல்லாம் சொல்வேன்.
ஆனாலும் ஒரு சப்ஜெக்டில்
நேற்று வரை இருபத்தைந்தை தாண்ட வில்லை.
இன்று சென்டம்.
போடா..போடா..போடா
என்று சொன்ன அந்த
"டா வின்ஸி"மங்கை
ஐ லவ் யூயூ யூ டா டா..என்றாளே.
"சொல்லுடா" அப்பா கேட்டார்..
"திரு திரு"என்று விழிக்கிறேன்.
______________________________________________
உச்சி உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
என்று சொல்ல
இந்த "பஸ்ஸின் உச்சி" தானே
எங்களுக்கு கிடைத்தது.
"பஸ் டே"
____________________________________________________
இன்றைய ஜிகினாக்கள் தொங்கும் உலகம் !
நாளை தெரியும்
அறுந்து தொங்கும் சமுதாய நரம்புகளின்
அவலங்கள் !
ப்லேஸ்மெண்ட் கிடைத்தால்
சங்கப்பலகை தான்.
இல்லை யென்றால் எங்களை மூடும்
சமாதிப்பலகை அது!
___________________________________________________