என் கனவு தேசம்

என் கனவு தேசம்!
இங்கே,
ஏழைகள் யாருமில்லை
ஜாதி மத பேதமில்லை!!

பெட்ரோல் டீசல் தேவையில்லை
வாகன நெரிசல் வாழ்வில் இல்லை!
சுற்றுப்புறங்கள் அசுத்தமில்லை
சோம்பேறிகள் இங்கு யாருமில்லை!

விண்ணில் பறக்கும் வாகனமுண்டு!
அதை வெற்றிகரமாய் இயக்க,
இயந்திர மனிதர்கள் உண்டு!

பள்ளிக்கூடம் தூரம் இல்லை
பாடப் புத்தகம் பாரம் இல்லை!
இணையக் கல்வி இங்கே உண்டு - அதை
இயக்கம் இயந்திரம் அருகில் உண்டு!

அன்னை தந்தை யாவரும் உண்டு
ஆனால் அதற்கும் எல்லை உண்டு!
இறப்பு என்பது இல்லவே இல்லை,
கடும் சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை!
காதல் மட்டும் காணாத முல்லை!!!

எழுதியவர் : தமிழரசன் (27-Aug-15, 5:25 pm)
Tanglish : en kanavu dhesam
பார்வை : 1562

மேலே