வலி

அன்று ....

உனக்காக காத்திருந்து
உள்ளுக்குள் வேர்த்திருந்து
வழியெல்லாம் பார்த்திருந்து
வருவாயாயென தவித்திருந்து

கண்களை இமைக்க மறந்த காட்சிக்காக
கால்கள் கடுக்க நான் காத்திருந்தேனே!

கண் இமைக்கும் நேரத்திலே
மின்னல் போல் வந்து விட்டு சென்றவளே,
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு ஏனோ இனிக்கத்தான் செய்தது :

"பேச நேரமில்லை, நாளைக்கு பார்க்கலாம்"

ஆனால்
இன்றும் நான் காத்திருந்தேனே;
என்னிடம் நீ சொன்ன வார்த்தைகள்

"பேச ஒன்றுமில்லை. இனிமே என்னை பார்க்க வராதீங்க"

இதுவா காதல் வலி?
இதற்கு என்ன வழி ?

தேடுகிறேன் ஓடி விட்ட உன்னையும்,
ஒடுங்கி விட்ட என்னையும்.

வலிக்கு வழி வேதனை
அந்த வேதனையுடன் நான் உன் வழியில்
மீண்டும் காத்து நிற்கிறேன், பார்த்து நிற்கிறேன்:

நிச்சயம் நீ வருவாய்!

நம்பிக்கை தானே காதல்? வாழ்க்கை கூட ?

எழுதியவர் : செல்வமணி (27-Aug-15, 8:56 pm)
Tanglish : vali
பார்வை : 138

மேலே