பேய் காதல் கதை 3
டேய் பஸ் வந்திச்சி டா...
என்னவள் கத்த
எது இது தான் உங்க ஊர் பஸ்ஸா என நக்கலடித்தேன்....
உண்மையில் அது பஸ்ஸிற்கே உரிய குணாதிசியங்களை பெற்றிருக்க வில்லை....
அதை பார்த்ததும் கரகாட்டக்காரன் காமெடிதான் நினைவுக்கு வந்தது.
பஸ் என்னை வேகமாக கடந்து சென்றது...
என்ன டி பஸ் நிக்கவே இல்ல...என்றேன்
பஸ் வரும்னுதான் சொன்னேன்.நிக்குமுனு சொன்னேனா.... என்றாள் பதிலுக்கு
ம்ஹும் அவளுக்கென்ன ஒரே தாவலில் பஸ்ஸை அடைந்தாள்.
நான் வழக்கம் போல கத்திக்கொண்டே பின்னால் ஓடினேன்
எப்படியோ ஏறி விட்டேன். என் தேவதை என் தோளின் மேல் அமர்ந்திருந்தாள். இப்போதெல்லாம் அவள் என் தோழில் தான் அமர்கிறாள். அவள் ஆன்மா விற்கு எடை இல்லை என்று சொல்லிட முடியாது. அவ்வளவு எடை இல்லை என்று சொல்லலாம்...
பேருந்து நகர...நானும் என் எண்ணத்திற்குள் நகர்ந்தேன்
அன்று எனக்கும் என்னவளுக்கும் சண்டை...2 நாள்கள் பேசிக்கொள்ளவே இல்லை. இன்னும் 1 நாள் கடந்திருந்தால் நான் பேசி இருப்பேன்.
ஆனால் அவளாக அருகில்..... வந்து
என்ன டா செல்லம் பேச மாட்டியா கோபமா என்றாள்.....
நான் அணைவிட்டு பாயும் வெள்ளம் போல வேகமாய் இல்ல டி செல்லம் என்றேன்...
ஏனென்றால் எங்களுக்குள் சண்டை வந்தால் நான் தான் முதலில் பேசுவேன்...
இதுவே முதல் முறை அவள் பேசியது அதனால்தான் சற்று அதீத வேகம் என் பேச்சில்
சற்று நேர அமைதிக்கு பின் செல்லம் உன்ன விசத்தை கொடுத்து கொலை பண்ணி இருக்காங்க....அவங்கள பழி வாங்க வேண்டாமா? போலிஸ் கிட்ட சொல்ல வேணாமா? என்றேன்
சொல்லி என்னடா ஆக போகுது.....பழி வாங்குனா நான் உயிரோட வந்துருவேனா? சொல்லுடா செல்லம் என்றாள்....
அது இல்ல என நான் பேச ஆரம்பிக்க அவளே தொடர்ந்தாள்....
எனக்கு எங்க அத்தை தான் அம்மா.....சின்ன வயசுல இருந்தே என்னய பாசமா வளத்தவங்க...அவங்க மேல நான் உயிரையே வச்சி இருக்கேன்.
என் உயிர எடுத்தவங்களா கூட இருக்களாம்...என்னால அவங்கள வெறுக்க முடியாது என்று பேசி தலை குனிந்து நின்றிருந்தாள்
இது நான் எதிர்பார்த்தது தான்...
அவளை கடித்த பூரானைக்கூட கொல்ல வேண்டாம் என்றவள்.எப்படி அத்தையை பழி வாங்க நினைப்பாள்...இவளை கொல்ல எப்படி மனசு வந்தது அவள் அத்தைக்கு என்று நானே அத்தையை நொந்துக்கொண்டேன்.
சரி நான் எதுவும் கேட்கவே மாட்டேன் எங்க கொஞ்சம் சிரி என்றேன். இது அவளை சமாதானம் செய்ய சிறந்த வழி.... அவள் அழுதுக்கொண்டே இருந்தாலும் சிரிக்க சொன்னாள் சிரித்திடுவாள். அவ்வளவு பெரிய அசட்டு குழந்தை அவள்
டேய் நவின் எனக்கு ஒரு ஆச இருக்கு டா...
என்றாள்
என்ன செல்லம்...என்றேன் பதிலுக்கு
அவள் பீரோவை பார்த்தாள்
தானாகவே பீரோ திறந்தது அதில் இருந்த பத்திரம் என் கையில் விழுந்தது...
என்ன பத்திரம் செல்லம் என்றேன்.
என்னோடா சொத்து பத்திரம் டா,...எனக்காக இதை எங்க அத்தை கிட்ட கொடுப்பியா என்றாள்.
நான் முடியாது டி...என்னால முடியாது..என்றேன்
அவள் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள்,..
இப்படித்தான் என் பிடிவாதத்தை எல்லாம் ஒற்றை சினுங்களில் வெற்றி பெற்றிடுவாள்.
டேய் ஊர் வந்திச்சி டா என்றாள். நானும் விழித்துக்கொண்டேன்...
பஸ்ஸில் டிக்கெடிற்கு காசு கொடுத்துவிட்டு இறங்கினோம்...
ஊர் எங்கும் வயல் மற்றும் தோட்டத்தினால் சூழப்பட்டிருந்தது. என்னவள் போன்ற தேவதை பிறப்பதற்கு சரியான சூழலைக்கொண்டிருந்தது அவளுடைய ஊர்
என்னவள் வழிக்காட்ட நான் அத்தை வீட்டிற்கு சென்றேன்...
நான் நினைத்தது தவறு அவர்கள் வசதியாக வாழ்வார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஓலை குடிசையில் வீற்றிருந்தார்கள்...
எனக்கு அவள் அத்தையை பார்த்ததும் கடும் கோபம வந்தது.ஆனால் ஏதும் பேச முடியவில்லை. இது என்னவள் மாயைத்தான். நான் நடந்ததை கூறி சொத்து பத்திரத்தை கொடுத்தேன்.பத்திரத்தை வாங்கியதும் ஏதும் பேசாமல் வெளியேறி வேகமாக நடந்தேன்.
அவள் அத்தை கூப்பிட்டும் கேளாதவனாய்
சற்றுத்தூரம் நடந்திருப்பேன் அவளிடம் இப்ப சந்தோஷாமா என்றேன் ஒருவித ஆத்திரத்துடன்.
அவள் ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.
நீ ஏன் உள்ள வரவில்லை என்றேன். அவள் என்னால உள்ள வர முடியல டாஎன்றாள் சோகமாக.ஏன் என்று வினாவ மனம் இல்லை....
பஸ்ஸிற்காக காத்திருந்தோம் I am so lonely பாடல் ஒலித்தது. இந்த முறை அவள் பாட வில்லை...என் செல்லில் ஒலித்தது...
நான் பச்சை பொத்தானை அழுத்தி ஹலோ என்றேன்...
எதிர் புறம் என் நண்பன் தங்க செல்வன். டேய் நவின் மச்சான் நான் என்னோட சீப் கோதண்ட ராமன் கிட்ட பேசிட்டேன் டா... சப்திகா யோட ஜீன் மட்டும் இருந்திச்சி என்றால் அவளை குளோனிங் பண்ண சம்மதிச்சிடார் டா.... என்றான் வேகமாக
ரொம்ப கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கினேன் என்றான்.
மச்சா ரொம்ம நன்றி டா என பதில் கூறக்கூட தோன்றவில்லை அவ்வளவு சந்தோஷாம்.
இதுவரை சோகமாக இருந்தவனை இந்த செய்தி சந்தோஷாமாகவும் சுறுசுறுப்பும் ஆக்கியது.
என்னவள் யார் என வினாவினாள்.
தொடரும்