பசியில் அரசியல்

வாழ்கையை வாழ வழியில்லாமல்,
வயிறொன்று இருந்ததால் உயிர் வாழ விரும்பி
வாய்ப்புக்காக காத்திருந்தோம் - கிடைத்தது

ஊரெல்லாம் சேர்ந்து உருப்படியாய்
நிலம் உழுது, உசுரு போக உழைத்ததில்,
கிடைத்தது உணவு தானியங்கள்.

ஆனால் விற்பதற்கு சந்தைக்கு போயி
வீடு திரும்பிய கணவரிடம்...
எதிர்பாத்து ஏமாந்து போனோம்..ஏதுமன்றி ..
எல்லாம் தெரிந்த அரசியல் வாதிகளால்..

எழுதியவர் : கணேச மூர்த்தி (29-Aug-15, 9:46 pm)
Tanglish : paciyil arasiyal
பார்வை : 97

மேலே