நெருஞ்சி
முந்தியடித்து பண்ணியும்,
முதல்நாளில்..
முன்பதிவு உறுதியாகாது போக,
காசு கொடுத்து ..கணக்கு பண்ணி,
தொடர்வண்டியின் கழிவறை அருகிலமர்ந்து,
பயணப்படும் வேளையில்
நினைவிற்கு வருகிறது..
வீட்டிற்கு 'தூர'மென
மூன்று நாட்கள்
உன்னை
வீட்டின் மூலையில்
முடக்கி வைத்தது...