என்னவளின் ஸ்பரிசம்

என்னவளின் எண்ணத்தில் ..,
எண்ணியவை நானாக ..,

பொன்சிரிப்பு இதழோரம் ..,
தேன் குடிக்கும் மீனாக ..,

உடலோடு உறவாடும் ..,
மேலாடை நானாக ..,

இடையோடு விளையாடும் ..,
ஊடல் அவள் விழியாக ...,

மடிமீது சாய்ந்தாடும் ..,
கருங்கூந்தல் அவளாக ..,

மலர் போன்ற கைவிரல்கள் ..,
மனதோடு எனை தேற்ற ..,

செம்மேனி கன்னியவள் ..,
முறைமாமன் எனக்காக ....!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (30-Aug-15, 1:39 am)
Tanglish : ennavalin sparisam
பார்வை : 317

மேலே