சன்னலின் பார்வைக்குள் - தேன்மொழியன்

பலகணியின் பார்வைக்குள் ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கானம் இசைத்த காட்டிற்குள்
வாழ்வின் வானம் வர்ணமடி ...

மௌனம் உடைத்த மேகத்தில்
வீழும் கண்ணீர் வீரமடி ...

பாதம் உரசிய அலைகளில்
சமுத்திர பார்வை குழந்தையடி ...

தேகம் நனைத்த நதிகளில்
ஒவ்வொரு நொடியும் ரசனையடி ..

மின்மினி பரந்த இரவுகளில்
இருவிழி முழுதும் கவிதையடி ..

- தேன்மொழியன்

# தங்கையின் கனவுகள்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார்) (30-Aug-15, 7:24 pm)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே