படுக்கை

படுக்கை என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம்.....அல்லது பொருள்.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முக்கியமான அறைகள் உண்டு.
இதில் இரண்டாவது அறை படுக்கை அறை.

இந்த அறைக்குள் இருக்குள் மிக முக்கியமான பொருள் படுக்கை....அதாவது bed.
ஏன் ஒரு மனிதனுடைய வாழ்வில் இந்தப் படுக்கை என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது?

ஏன்?......முதன் முதலில் படுக்கையில் தான் பிறக்கிறான். வாழ்நாளின் பாதிப் பகுதியை பெட் டில் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டோ, அல்லது தூங்கிக் கொண்டே தான் கழிக்கிறான். அப்பறம் அதிலேயே நாலுபேர் தூக்கிச் செல்ல ஒரேயடியாகப் படுத்து விடுகிறான்.

இடைப் பட்ட காலங்களில் தான் அது மிகவும் உபயோகமாக இருக்கிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

பல வகையான படுக்கைகள்(கட்டில்) இருக்கின்றன. இரும்புக்கட்டில், மரக்கட்டில், சிங்கிள், டபுள் கட்டில், பகலில் உபயோகிக்கும் கட்டில், ஆஸ்பத்திரி கட்டில், டெண்டில் பயன்படுத்தும் கட்டில், சில சமயம் கட்டில் இல்லாத வீட்டில் தரைக்கட்டில், இன்னும் எத்தனையோ....

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது படுக்கையை பயன் படுத்த வேண்டுமாம்.
மற்றவர்களைப் பற்றிய புள்ளிவிவரம் இன்னும் கிடைக்கவில்லை.

எழுதியவர் : செல்வமணி (முகநூலிலிருந்த (31-Aug-15, 2:20 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : padukkai
பார்வை : 108

மேலே