புரோகிதர்களே இல்லை
தமிழ் நாட்டை பொறுத்தவரை கடந்த 3 தலைமுறையை சேர்ந்த பிராமணர்கள் படக்கூடாத பல கஷ்டங்களையும் பட்டு விட்டார்கள்.
தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் தங்களை அரசியலில் ஸ்திரப்படுத்திக் கொள்ள பிராமண எதிர்ப்பு என்ற ஒரு கேவலமான விஷயத்தை கையில் எடுத்து மக்களின் மனதில் விஷத்தை பரப்பி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
பத்து காசுக்கு பெறாத அரசியல்வாதி கூட பார்ப்பான் என்று திட்டுவான். 1950 களில் தொடங்கி தமிழகத்தில் பிராமணர்கள் சந்தித்த கொடுமைகள் பலப்பல. நானும் ஒரு பிராமண, புரோகித குடும்பத்திலிருந்து வந்ததால் என்னால் அந்த மறக்க முடியாத கருப்பு நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வைதீக பிராமணர்களுக்கு குடுமி முக்கியம். அப்போது பிராமணர்களின் குடுமியையும், பூணூலையும் அறுப்பதை ஒரு பெரிய சாதனைகளாகவே கருதினர். திருச்சியில் கொள்ளிடக் கரையில் ஒரு ஆவணி அவிட்டத்தன்று செய்த அழிச்சாட்டியம் மறக்க முடியாத ஒன்று. இதை தட்டிக் கேட்ட ஒரு பிராமணர் கொலையே செய்யப்பட்டார்.
அன்று எந்த மனித உரிமை காரகளும் அன்று இந்த அயோக்கியத் தனங்களை கண்டிக்கவில்லை. சிலர் பேசிய பேச்சுக்களும், போட்ட ஆட்டமும் அப்படி. கிட்டத்தட்ட இன்னொரு முகலாய சாம்ராஜ்ய ஆட்சிதான் அப்போது நடந்தது.
இந்த பிரச்சினை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் தமிழ் நாட்டில் நீடித்தது. 1977 ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சி அமைந்த பிறகுதான் பிராமணர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் தான் பல பிராமண குடும்பங்கள் பாதுகாப்பு கருதியும், பிழைப்பு தேடியும் வேறு மாநிலங்களுக்கும் போக துவங்கினர்.
ஆலய பூஜைகளை செய்து வந்த சிவாச்சார்யார்களும், ஸ்ரீ வைஷ்ணவ பட்டாச்சார்யார்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. பிராமணர்கள் வெளியேறியதால் பல ஆலயங்கள் இன்று ஒருவேளை பூஜை கூட இன்றி ப்ரிதாப நிலையில்.
இதனால் வெறுத்துப் போன கொஞ்ச நஞ்ச பேரும் இந்த வைதீகம் நம்மோடு போகட்டும் என்று முடிவெடுத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஏதேனும் வேலை தேடிச்சென்று விடும்படி அறிவுறுத்தினர். இப்போது பல கிராமங்களில் புரோகிதர்களே இல்லை. பிராமணக் குடும்ப்ங்களே இல்லாத கிராமங்கள் இன்று தமிழகத்தில் பல உண்டு.
தற்போது தான் பிராமணர்களுக்கு சற்று நிம்மதியும் தைரியமும் வந்து உள்ளது. இப்போதைய தேவை ... நம்மைப் போன்றவர்கள் வைதீகர்களை ஆதரிக்க வேண்டியது. எது எதற்கோ லட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறையேனும் 10 வைதீகர்களை வீட்டுக்கு அழைத்து ஏதேனும் ஒரு பூஜையோ, ஹோமமோ செய்து நம்மால் ஆன, அதே நேரத்தில் அவர்களை கௌரவிக்கும்படியான ஒரு தக்ஷிணையும் தந்து நமஸ்கரித்தால் அவர்களும் திருப்தியுறுவார்கள்.
ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே இப்போது அவனவனும் ஜாதியை வைத்துத் தான் பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறான். ஆனால் நம்மவர்கள்...? சற்று சௌகரியம் வந்து விட்டால் தம்பியே அண்ணனை திரும்பி பார்ப்பது இல்லை. ஒரு குடும்பத்தில் ஒருவன் வைதீகத்தில் இருந்து, கஷ்டப்படுகிறான் என்றால் கைகொடுத்து தூக்கி விடுவதில்லை. அப்புறம் எப்படி நிலைமை மாறும்..?
பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு பிராமணனும் ஒரு பிராம்மண பையனுக்கு பெண்ணை தந்தால் போதும். நமக்கு வேறு யாரும் உதவ தேவையில்லை.
படித்த ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் தான் படிப்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே என்று உணர வேண்டும். வைதீகத்தில் உள்ள பிராமணனை கல்யாணம் செய்து கொள்வதை பெருமையாக கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு கிறிஸ்தவனையோ, முஸ்லிமையோ காதலித்து திருமணம் செய்து கொள்கிறவர்களை என்ன வென்று சொல்ல...?
இன்றைய நிலையில் பிராமணப் பெண்கள் திருமதி. விஷாகா ஹரியைப் போன்றவர்களை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். ஸ்ரீமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பிறகு நம் கண் முன்னே வாழும் ஸ்த்ரீ ரத்னம் இவர்.
இந்த பிரச்சினையில் ஒரு நல்ல மாற்றம் வெகுவிரைவில் வரும். அந்த நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய சமுதாய கடமையும் நமக்கு இருக்கிறது.