சொலவடை
இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் (!) ஆண்கள் வைத்ததே சட்டம்.
பெண்கள் அதற்குள் ஒடுங்கி அமைதியாகப் போக வேண்டும்.....
பிறகென்ன?....அதுவே பழகிவிடும்....பெண்களின் இயல்பாகிவிடும்.
சமுதாயம் என்ன சொல்லுமோ....பழி போடுமோ என அஞ்சி அஞ்சி தங்களைச் சுற்றியே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதுவே தன் உலகம் என்று வாழும் பெண்கள் அநேகம்.
இது இன்று நேற்றல்ல.....தொன்று தொட்டு பெண்களின் நிலை இதுதான் என்பதை மிக வெளிப்படையாக சொல்லுகிறது ஒரு சொலவடை....
"குமரின்னு இல்லாம வாக்கப்பட்டேன்
மலடின்னு இல்லாம பெத்துக்கிட்டேன்
அதுக்கும் மேல என்ன.........?"
பெண் என்பவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...அது மட்டுமின்றி பிள்ளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை பெற்றதாக கருதப்படுகிறது.
இதை நான் சொல்லவில்லை. இந்தச் சொலவடை சொல்கிறது. எத்தனை வேதனை இந்த வார்த்தைகளில்......?