சிகப்பு குடை பிடித்த பெண்

இப்பொழுதெல்லாம் இப்படியாக இருக்கிறது எனது கற்பனைகள்,
மழை பொழிந்து முடிந்த சாலை,
யாரையோ எதிர்நோக்கி,
சிகப்பு குடை பிடித்த பெண்!
நான் நெருங்க,
அவள் திரும்பப்பார்க்கிறாள்,
அதற்குள்ளாக கற்பனை கலைகிறது!
கண் திறந்துப்பார்க்கிறேன்,
மீண்டும் அதே சாலை!

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (31-Aug-15, 6:59 pm)
பார்வை : 216

மேலே