கடவுளின் குழந்தைகள்
இப்போதுதான் புரிகிறது
அவன் ஏன் ஓடி ஒளிந்து கொண்டானென்று
பின்னே ஒளிய மாட்டானா
இத்தனை பிள்ளைகளை
எப்படி படிக்க வைப்பான் அவன்
எப்படி மணமுடித்து மகிழ வைப்பான்
எத்தனை பிள்ளைகளடா உனக்கு
"ஆதரவற்றோர் இல்லத்தில் கடவுளின் குழந்தைகள்"