காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்
கனவுலகில்
காலங்கள்
மாண்டன.....
மீண்டிட முடியாத
வாழ்வின்
நிஜங்கள்.....கண்முன்னே
தொலைவது
கண்டும்
கேட்டிடா
அவலங்கள்
கண்டேன்......
அவளே போதும்
அவள் தந்த
நினைவுகளே
போதும்.....எனப்
புலம்பும்.....ஒருதலைக்
காதலில்
ஒருமுறை
குழிதோண்டிப்
புதைத்தேன்
அரிய வாழ்க்கையை.......
அண்டங்கள்
கடந்து.....ஏழு
கடல்
தாண்டி.....வருவேனே
போவேனே.....
வாய்க்கு வந்த
பாடல்கள்.....முணுமுணுத்து
இன்றுவரை
அங்கேயே......நின்று
கொண்டேன்......
வெறுப்பேற்றும்
பேச்சுக்கள்
கேட்டும்
வேதனைப்
பட்டும்.....விலகாமல்
நிற்கும்
வினோதம்
கண்டேன்......
பொதுவாக
காதல்
சொல்லாமல்
பூக்கும்......
நினைவுகள்
தாக்குமென்று
தெரிந்தும்
வாடி விழும்
பூக்கள்
போல......சில
ஆட்களின்
காதல்......
காதலைப்
பற்றி
கவிதை
எல்லோரும்
எழுதுவார்கள்......
எழுதுங்கள்
காதல்
தலை விதி
என்று......!
தீராத
சோகம்தனை
வாங்கித் தராத
காதலும்
உலகில் இல்லை.....
கல்லறைக்கு
மாளிகை
கட்டி....உலகுக்கு
அதிசயம்
சொன்ன......யாருக்கும்
புரியாது
காதல்
வலியின்
உயரம்.......!?
கண்ணீரில்
உன்னை
விழுத்தும்
கானல் நீரென்று
சொன்னாலும்
அள்ளிப் பருக
வைத்து
பரிகசித்துப்
போகும்......
பொய் முகங்கள்
உலவும்
உலகம் இது.....
போதும் இந்த
பொய் வாழ்க்கை......
மெய்யாக நான்
வாழ ஒருநாள்
போதும்.....மறுநாளே
மரணித்து
விட......
(காலங்கள் நீளும் போது கன்னம்
வைக்கும் கள்வர்கள் ஏராளம்)