பிடிக்காமலா
என்
குணம் பிடித்தவளுக்கு
மனம் பிடிக்கவில்லையா ?
மனம் பிடித்தவளுக்கு
நிறம் பிடிக்கவில்லையா ?
நிறம் பிடித்தவளுக்கு
உடன் நிற்க பிடிக்கவில்லையா ?
என்
கண்கள் படித்தவளுக்கு
காதலிக்க பிடிக்கவில்லையா ?
தோழமை பிடித்தவளுக்கு
தோள் சாய பிடிக்கவில்லையா ?
கனிவானவனை பிடித்தவளுக்கு
கணவனாக பிடிக்கவில்லையா ?
விருப்பங்கள் பிடித்தவளுக்கு
விரல் கோர்க்க பிடிக்கவில்லையா ?
காதல் பிடிக்கவில்லையா ?
காதலனை பிடிக்கவில்லையா ?
பிடி கொடுக்காமலேயே
போகின்றாயே
பிடிக்காமலா ?