உண்மையான பக்தி

கண் பார்வை இல்லாதவர் கோவிலுக்கு வந்தார். பூசாரி கேட்டார்,''ஐயா,
உங்களுக்குத்தான் கண் தெரியாதே? மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே, கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்? என்றார்''

பார்வையற்றவர் சொன்னார்,''ஐயா, நான்
கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன
ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால்
போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று நம்பித்தான் வந்திருக்கிறேன் .''

இது தான் உண்மையான பக்தி; உண்மையான ஆர்வம்;
உண்மையான நம்பிக்கை என்றாராம்.

எழுதியவர் : செல்வமணி (source: penmaicom) (1-Sep-15, 10:42 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : unmaiyaana pakthi
பார்வை : 266

மேலே