வசவு
அந்தத் திருநங்கை
தன் இளையாள் ஒருத்தியைப்
பெண்பால் வசவுச் சொற்களால்
கடிந்தாள் வைதாள்.
கேட்டவள் முகத்தில்
அச்சொற்களால் பெற்ற
நிறைவின் தடயங்கள் தெரிந்தன.
சூழல் புரியாமல்
விழித்தபடி நான் நிற்க
‘அக்கா அப்படித்தான்...
நீங்க வாங்க...
நான் எலுமிச்சை சுத்திப் போடறேன்...’
என்றழைத்தாள்.