கவிதையும் காதலும் - 3
"காதலிக்க தெரிந்தவர்களெல்லாம்
கவிதை எழுத தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ
கவிதை எழுத தெரிந்தவர்களெல்லாம்
காதலிக்க தெரிந்திருக்கிறார்கள்"
ஏனெனில்
"பிறக்கையிலே கண் இரண்டும் திறந்திருக்காது
பின்னொருநாள் கண்ணிரண்டும் மூட வராது"
காரணம்
கவிதையின் உதயம் மூளையில்,
காதலின் உதயம் மனதினில்.
மூளைக்கும் மனதிற்கும்
இடையில் தூரம் அதிகமில்லை.
மூளை என்பது பொதுநலத்தின் சுயநலம்,
மனது என்பது சுயநலத்தின் பொதுநலம்.
காதல் துளிக்கும் கணம்வரை
மூளைக்குள் பிஞ்சு மனம் உறங்கி கிடக்கும்.
காதல் உணர்வு ஊறுகையில் மட்டுமே
மனமெனும் சுயம் திறந்து கொள்கிறது.
வாழ்வின் வசந்த வாசலில்
மனம் மயங்குவது காதலில்,
மனம் சொல்லவொற்றா உணர்வுகளின்
மறுதலிப்பு மூளைக்குள் கவிதை வடிவில்
காதலின் உச்சம் கவிதை
கவிதையின் உட்கணம் காதல்.
(தொடரும்)