பேசிய கவிதை

கண்கள் பேசிய கவிதை எங்கே
கண்ணின் மணி
நின் கண் கண்ட
கதை கூறவோ
நான் கொண்ட
துயர் கூறவோ

உன் உதடுகள்
புன்னகை பூத்தாலும்
கண்களில் ஏனடி
கண்ணீர் பூ

காதல் சொல்லிய
விழிகளில்
இன்று
வலிகள் மட்டும் ஏனடி

கவிதை பேசிய
கண்களில்
இன்று
கலக்கம் மட்டும் ஏனடி

உன்
கண்கள் சொல்லும்
கவிதை கேட்க
காத்திருப்பேன்
ஒரு அயுள் நானடி

இனியவளே என்று
பூக்கும்
உன் கண்களில்
புன்னகை
பூ

எழுதியவர் : காதல், கண்கள் (4-Sep-15, 3:57 pm)
Tanglish : pesiya kavithai
பார்வை : 86

மேலே