கனவு பெண்ணே

பாரதியின் கனவு பெண்ணே !!!
உன் பரிதவிப்பிற்கு காரணம் என்ன ???

உனக்குள் என்ன நடுக்கம்- எதைக்
கண்டு உன்னில் இன்னும் தயக்கம்!!

உன்னில் உள்ள புனிதம் -இன்று
உலகிற்கே தேவையான மனிதம் !!

பெண்ணே உன்னால் முடியும் -இந்தப்
பேருலகைச்சற்று நீ பார்த்தால் விடியும் !!

சோர்ந்துப்போக ஏன் வேண்டும் - நீ
நிமிர்ந்தது வாழ துணிவு வேண்டும் !!

வருத்தம் ஏன் உனக்கு -இந்த
உலகில் வாழ வழிநூறு இருக்கு !!

கண்ணில் ஏனடி நீர்த்துளி -உன்
கரங்களே இரு உளி !!

தொடுவானம் என்பது தொலைவில்லை -அதை
தொடும்தூரம் என்பது பெரிதில்லை !!

எண்ணத்தை ஏணிப்படியாக்கு-எதையும்
புதுச்சிந்தனையோடு நீ நோக்கு !!

கலாச்சாரத்தைக் கற்பாய்க்கொள் -மேலும்
கடைசி மூச்சுவரை நம்பிக்கைக் கொள் !!

சோதனை என்பது நிரந்தரமில்லை
சாதனை என்பது சாதாரணமில்லை !!!

தோல்விகள் என்றும் தொடர்வதில்லை -உன்
கனவுகள் ஒன்றும் கானல்நீரில்லை !!!

எழுதியவர் : சுடர்விழி .இரா (4-Sep-15, 5:07 pm)
Tanglish : kanavu penne
பார்வை : 519

மேலே